பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

கோரமின்மை காரணமாக, அதாவது போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னமின்மை காரணமாக, பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் இடம்பெற்ற போதும், சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னமின்மை காரணமாக, சபை நடவடிக்கைகள், எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று சபைக்கு தலைமை தாங்கிய, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம், போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னமின்னை சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அவர் கோரம் சேர அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தார்.

இதன் போது, 9 பேர் மட்டுமே சபையில் இருந்தனர்.
இதனால் சபையில் குறைந்தபட்சம் 20 பேர் இருந்தால் மட்டுமே, சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதனால், சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!