பொகவந்தலாவயில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனாத் தடுப்பூசி

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட கேர்க்கஸ்வோல்ட் குருப், கிலானி, தேரேசியா, மோரா, ரொப்கில், டின்சின் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை 30 வயதுக்கும் மேற்பட்டார்கள் வரிசையில் இதுவரையிலும் பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 25 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.வை.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!