சீனாவில் இருந்து மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

சீனாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம், தடுப்பூசிகளுடன் இன்று காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அத்துடன் தடுப்பூசிகளை எடுத்துவந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் இன்று காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சீனா அரசாங்கத்தினால் ஒரே தடவையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அதிகளவான சைனோபாம் தடுப்பூசித் தொகை இதுவாகும். அதனடிப்படையில் இதுவரையில் சீன அரசாங்கத்தினால் 27 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!