உடுப்பிட்டியில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில், கைதான இருவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடிப் பகுதியில் அண்மையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலடிப் பகுதியில் அண்மையில் வீதியில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் கடந்த 20ஆம் திகதி இரவு இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மற்றொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய அவர் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இரண்டாவது சந்தேக நபரிடம் இருந்து வாள் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் தலைமறைவாகி உள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!