தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 48 ஆயிரம் பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார். இதேவேளை வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறார்களை கண்டறிவதற்காக மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பணிக்கமர்த்தப்பட வேண்டிய வயதெல்லையை விட குறைந்த வயதுடையவர்களை பணிக்கமர்த்தியுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!