வவுனியா கடைத் தொகுதியில் 25 பேருக்குக் கொரோனா!

வவுனியா பழைய பஸ் நிலையக் கடைத் தொகுதியில் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன.

அதில், வவுனியா பழைய பஸ் நிலையத்தில் வர்த்தக நிலையங்களை நடத்துவோர், வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் என 25 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களைக் கொரோனா சிகிச்சை நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் சுயதனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!