யாழ்ப்பாணத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்.

72 நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த ரயில் காலை 5.15க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும், பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது. பயணத் தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவை 72 நாட்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!