வடக்கு மாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனாத் தொற்று.

Blood sample tube positive with COVID-19 or novel coronavirus 2019 found in Wuhan, China

யாழ். மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 45 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 485 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர் என யாழ்.மாவட்டத்தில் 24 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர் என கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேருக்கு
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வெள்ளாமுள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 09 பேர், புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர், கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!