கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் தண்ணீரின்றி வற்றிய நிலையில் குளங்கள் : பிரதேச மக்கள் கவலை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள குளங்கள் வறட்சி நிலைமை காரணமாக தண்ணீரின்றி வற்றி காணப்படுகின்றது. அதன் காரணமாக அழகிய மலர்கள் அழிந்து வரும் நிலையிலும் கால்நடைகள் தண்ணீருக்காய் அல்லலுறும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
அத்துடன் இக் குளங்களுக்கு வருடம் தோறும் தண்ணீர் விடுவதற்கான அனுமதியும் நீரப்;பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நிலையிலும் இப்படி ஓர் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இம்முறை இதுவரையில் குளங்களுக்கு தண்ணீர் விடப்படாத கரணத்தினால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இக்குளத்திற்கான கால்வாய் துப்பரவு பணிகளை மேற்கொள்ள எவரும் முன்வராத காரணத்தினால் குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவருவதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக கமக்கார அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!