தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நாடாத்தப்பட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகள், கடந்த வாரம் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இடம்பெற்று இருந்தன இவ் தமிழ் மொழித் தினப் போட்டியில் வில்லூப்பாட்டுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்திறகுட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனைப் நிகழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில் தமிழ் மொழித் தினப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ரி.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை(12) பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்று இருந்தன.

நிகழ்வில் அதிதியகளால் மாணவர்கள் பாராட்டி கெரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இவ் வெற்றிக்காக உழைத்த ஆசியரியர்கள் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்ட அதேவேளை அதிதிகளும் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாயர் ரி.கஜேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர்
விநாயகமூர்த்தி, பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.இரவிச்சந்திரன், திருக்கோவில் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினம், முன்னாள் அதிபர் எஸ்.பரஞ்சோதி மற்றும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!