மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி இரு பிள்ளைகளின் தந்தை பலி

கருவலகஸ்வௌ முரியாக்குளம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர், மின்சார தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முரியாக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உபுல் நுவான் குமார (வயது 36) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபரின் பணப்பையிலிருந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக, புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!