வடக்கு மாகாணத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 369 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேருக்கும், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 05 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் என யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் என கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!