ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொரளைப் பொலிஸாருக்கு வழங்குமாறு, தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு 16 வயதான சிறுமியைப் பணிப் பெண்ணாக அழைத்து வந்த, இடைத்தரகரின் வங்கிக் கணக்குத் தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாத் பதியுதீன் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 16ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!