வடக்கு மாகாண ரீதியில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில், விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக, மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு, தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை வைபவ ரீதியாக, நானாட்டன் பிரதேச சபை தவிசாளரிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு, நனாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில், நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, பிரதேச சபை செயலாளர் ஜோகேஸ்வரம் உட்பட, நானாட்டன் பிரதேச சபை உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால், கடந்த 2017 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட, அரச அலுவலகங்கள் நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில், வினைத்திறனாக செயற்பட்டமைக்காக, வட மாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், கடந்த வாரம் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில், வட மாகாண ரீதியில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக, நானாட்டான் பிரதேச சபைக்கு, தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றது.
வட மாகாணத்தில் உள்ள, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில், நானாட்டான் பிரதேச சபை மாத்திரமே தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)