பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரியில் கட்டடம் புனரமைப்பு

நுவரெலியா ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரியில், சுமார் 10 வருடங்களாக பாவிக்க முடியாத நிலையில் இருந்த கட்டத்தை புனரமைக்க, அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளரும், நோர்வுட் பிரதேச சபை உறுப்பினருமான பழனிவேல் கல்யாணகுமார் தெரிவித்துள்ளார்.

20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில், கட்டடம் புனரமைக்கப்படவுள்ளது.

இன்று, பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரிக்கு சென்ற, நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர் பழனிவேல் கல்யாணகுமார், கட்டடத்தை பார்வையிட்டதுடன், கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கல்லூரியின் பிரச்சினை தொடர்பில், அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் ஊடாக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புனரமைப்பு வேலைகள், அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும், பிரதேச சபை உறுப்பினர் பழனிவேல் கல்யாணகுமார் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!