மட்டக்களப்பு பெரியகல்லாறில் இரு கிராமசேவகர் பிரிவு முடக்கம்

மட்டக்களப்பு – பெரியகல்லாறில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வீட்டில் மரணம் நடந்தால் அந்த வீட்டிற்கு பொது சுகாதார அதிகாரிகளால் அறிவித்தல் விடப்படும்.

அதனடிப்படையில் தேவையின்றி கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், அதனை மீறி கூடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயணி கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை நாளை பயணக்கட்டுப்பாடு நீக்கப்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!