ஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

ஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களிற்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து அவர்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்ட பணியினர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவதளபதி சவேந்திரசில்வாவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ள இராணுவம் விசாரணைகள் முடிவடைந்ததும் தவறிழைத்த படையினருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!