இலங்கை மற்றும் மாலைதீவுக்குபுதிய அமெரிக்கத் தூதுவர்: ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியோ சுங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சுங் நியமிக்கப்படுவார்.

தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவராக அலைனா அலெய்னா டெப்லிட்ஸ் செயற்பட்டு வருகின்றார்.

இவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!