தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கும் இழப்பீடு

தீ விபத்துக்குள்ளாகி ஒரு பகுதி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கு தமக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அறிவிப்பதற்காக தனிப்பட்ட முறை ஒன்று தயாரிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இதற்கமைவாக இவர்களால் இவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு உரிமைகோரும் விடயங்களை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பம் என்றும் அமைச்சர் கூறினார்.

´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொள்வது பற்றிய ஒரு கலந்துரையாடல் நேற்று (14) நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்ர் தெரிவிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் தமது இழப்பீட்டுக்கான விடயங்களை முன்வைப்பதற்கு வசதியாக இதுதொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் வெளியடப்படும் என்றும் கூறினார்.

இந்த கப்பல் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் தாக்கங்கள் தொடர்பில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் இழப்பீட்டை பெற்றுக் கொள்வதும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபருக்கு தேவைப்படும் ஆதரவை வழங்குவதும் இதன் நோக்கமாகும். ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்கள் செலவிட்ட தொகையையும் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் மையமாகக் கொண்டு இழப்பீட்டை கோரி இருப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் முதலாவது இடைக்கால இழப்பீடாக 40 மில்லியன் அமெரிக்க டோலர்களை கோரியுள்ளோம். இதுதொடர்பாக கப்பலின் உரிமையாளர் மற்றும் கப்பல் சங்கத்துடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டுவருகிறது என்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!