பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் தொடர்: சம்பியனானார் ஜோகோவிச்

பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் இறுதிப் போட்டியில் கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் தனது 19 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓப்பன் ரென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு இடம்பெற்றது.
களிமண் தரையில் இடம்பெறும் இத்தொடரின் நட்சத்திரமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச். மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முன்னேறினார். இறுதிப் போட்டியில் இருவரும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தினர். நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிட்சிபாஸ் மிகவும் அபாரமாக விளையாடினார்.

முதல் செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை பெற்றனர். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சிட்சிபாஸ் 7- 6 என முதல் செட்டை கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் விளையாடி ஜோகோவிச் சுதாரிப்பதற்குள் 2-வது செட்டையும் சிட்சிபாஸ 6-2 எனக் கைப்பற்றினார்
3-வது செட்டை கைப்பறினால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிட்சிபாஸ் களம் இறங்கினார். ஆனால் சுதாரித்துக்கொண்ட அனுபவ வீரரான ஜோகோவிச். 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டையும் ஜோகோவிச் 6-2 என எளிதில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஜோகோவிச் கையே ஓங்கியது. 6-4 என கடைசி செட்டையும் கைப்பற்றி கடும் போராட்டத்திற்கு மத்தியில் தனது இரண்டாவது பிரன்சு ஓப்பன் பட்டத்ததை பெற்றார். சுமார் 4.40 மணி நேரம் இந்த போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மூலம் டென்னிஸ் தரவரிசையில் 12 ஆயிரத்து 113 புள்ளிகளுடன் ஜோகோவிச் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இறுதிப்போட்டிவரை முன்னேறிய 22 வயதான கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7 ஆயிரத்து 980 புள்ளிகளை பெற்று 04 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்த வெற்றி மூலம் தனது 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நொவாக் ஜோகோவிச் வென்றுள்ளார். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் தொடர்ந்து இரண்டாம் இடம் வகிக்கின்றார். டென்னிஸ் ஜாம்பவான்களான ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!