யாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 731 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்படி காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவை சேர்ந்த 4 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பேரும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 10 பேருமாக 18 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதேபோன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தின் சோதனையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பேரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை சேர்ந்த ஒருவரும், யாழ். போதனா வைத்தியசாலையை சேர்ந்த ஒருவருமாக 6 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இதுதவிர, வவுனியாவில் ஒருவரும், மன்னாரில் இருவருமாக வடக்கு மாகாணத்தில் நேற்று 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!