திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி புதிய பிரதேச செயலாளராக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள த.கஜேந்திரன் ஆகியோர் திருக்கோவில் பிரதேச மக்களால் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேச சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கம் மற்றும் கட்டட ஒப்பந்தகாரர்கள் ஆகியோரின் எற்பாட்டில் நாளை சனிக்கிழமைமாலை (13) திருக்கோவில் கலாசார மத்தய நிலையத்தில் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளதுடன்
முன்னாள் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களின் ஆறுவருட காலத்தில் திருக்கோவில் பிரதேச மக்களுக்காக முன்னெடுத்திருந்த பாரிய அபிவிருத்தி பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் புதிதாக திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பெற்றுள்ள த.கஜேந்திரன் அவர்களை வரவேற்கும் வகையிலும் பிரமாண்டமான முறையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.