மலேசியாவில் சுமார் 82,000 சிறுவர்களுக்கு கொரோனா

மலேசியாவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,000 கடந்துள்ளது.

இந்நிலையில் சிறுவர்களும் அதிக அளவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

மலேசியாவில் 4 வயதுக்கு உட்பட்ட 19,851 பேரும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 8,237 பேரும், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 26,851 பேரும், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 27,402 பேரும் என 82, 341 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்தார்.

எனினும், இவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மலேசியாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிறுவர்களை மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு அழைத்துச்செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்ல முடியும். மேலும், கல்வி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்ல அனுமதி உண்டு.

எனினும், பிற காரணங்களுக்காக வெளியில் அழைத்துச் செல்ல அனுமதி இல்லை என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!