மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் அமைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை கண்டித்து வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் இன்று காலை கவனயீர்ப்பு போரட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கண்டன பேரணியை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆலயங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து ஆரம்பித்த போராட்டம் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
இதன்போது போராட்டக்காரர்கள் மகஜர் ஒன்றை அரசாங்க அதிபரூடாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைப்பதற்காக மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்திருந்தனர்.
இன்றைய பேரணியில் ‘அனுமதித்ததை அழுல்படுத்து’ , ‘எம்மவரை பங்கு போடாதே’, ‘வீடு வீடாக திரியாதே’, ‘திருக்கேதீஸ்வரம் புராதன ஆலயம் அதில் கைவைக்காதே’, ‘அன்பு செய்வதுபோல் ஆணவம் செய்யாதே’, ‘மன்னார் ஆயரே புராதன பாரம்பரியத்தை சிதைக்காதே’, ‘திருக்கேதீஸ்வர வளைவை மறைக்காதே’, ‘ஈழம் எங்கள் சிவபூமி’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் தாங்கியிருந்தனர். (நி)