மன்னார் – மாந்தை மேற்கில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காட்டு யானை தாக்கிய நிலையில், சிறு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அதிஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார். குறித்த இளைஞர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன் போது பருப்புக்கடந்தான் – கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்தக் கொண்டிருந்த போது, காட்டு யானை இளைஞர் மீது தாக்கியுள்ளது. இதன் போது இளைஞர் மோட்டார் சைக்கிளிpல் இருந்து பாய்ந்தநிலையில் மோட்டார் சைக்கிளை யானை சேதப்படுத்தியுள்ளது.
அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞர் மீட்கப்பட்டு, பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!