வடக்கில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 585 பேரின் மாதிரிகள் நேற்றுப் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேருமே புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டவர்கள், ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் முதல் நிலைத் தொடர்பினைக் கொண்டிருந்தமைக்காக தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கு ;தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வருக்கும், திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்களாவர். பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பை வைத்திருந்த நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்’ என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 24 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பினைக் கொண்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!