பொது நினைவுக்கல் நாட்டும் முயற்சி முறியடிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் நாட்டுவதற்காக நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினரால் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் படைத்தரப்பினருக்கும் அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆறு அடி உயரமான குறித்த நினைவுக் கல் பார ஊர்தி ஒன்றில் அந்தப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற படைத்தரப்பினர் கல்லை அங்கு இறக்கவேண்டாம் என்று தடுத்தனர்.

ஆயினும் அங்கு நின்ற அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினர் அந்தக் கல்லை அந்தப் பகுதியில் இறக்கினர். அதனை அங்கு நிறுவுவதற்கான சிமெந்து, மண் போன்ற பொருட்களும் கொண்டு வரப்பட்டன. கல்லை நாட்டும் பணியில் விரைவில் ஈடுபடப்போவதாக தெரிவித்த அருட்தந்தையர்கள் ஆறு பேரும் அங்கிருந்து சென்றதாகவும் படைத்தரப்பினர் தற்போது தொடர்ந்து அங்கு இருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!