மட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 28கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 02மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12)காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் 0.6வீதமான மரண வீதம் காணப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3.0வீதமாக மரண வீதம் காணப்படுதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது கொவிட் அலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 330பேர் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 07மரணங்கள் இந்த மூன்றாவது அலையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!