ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை வெளிநாட்டு அமைச்சில் ​நேற்று (11) சந்தித்தார்.

´தமிழ் இனப் படுகொலைக் கல்வி வாரம்´ தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே 06 ஆம் திகதி தனி நபர் உறுப்பினர் சட்டமூலம் 104 ஐ நிறைவேற்றியமை குறித்து அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலைகளை அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கின்றமை கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக இலங்கையில் ´இனப் படுகொலை´ நடந்திருப்பதை ஒன்ராறியோ சட்டமன்றம் கண்டறிந்திப்பதாக அமைச்சர் விளக்கினார். இந்த சட்டமூலத்திற்கான லெப்டினன்ட் ஆளுநரின் அரச அங்கீகாரத்தை நிறுத்துவதற்காக கனேடிய அரசாங்கத்தின் உடனடியான தலையீட்டிற்காக அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில் இணைந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே, நல்லிணக்க செயன்முறை, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு சட்டமூலம் 104 ஏற்படுத்தக்கூடிய தீங்குகள் குறித்து விரிவாக விளக்கினார்.

பல முனைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் அளிக்கப்பட்ட ஆதரவுக்காக கனேடிய அரசாங்கத்துக்கு வெளிநாட்டு அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்ததோடு, பரந்த அளவிலான இருதரப்பு விடயங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடினார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!