வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை! (படங்கள் இணைப்பு)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராம சேவகர் பிரிவில், கரப்புக்குத்தி கிராமத்தில், பெரியமடு வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதி, சின்ன அடம்பன் கிராம சேவையாளர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த காட்டுப்பகுதியில் இளம் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபா என வசூலிக்கப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு ஒரு சில பயனாளிகள் அத்திவாரம் வெட்டி கட்டப்பட்ட நிலையிலும், சில பயனாளிகள் அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த நிலையிலும் நெடுங்கேணி வன வள திணைக்களமும், அதிரடிப்படையும் இணைந்து பயனாளிகளை கைது செய்துள்ளனர். (நி)

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரச அதிகாரிகளின் சுய இலாபத்திற்காக பொது மக்களை பலிக்கடாவாக பயன்படுத்தி செயற்படுவதனால், பொதுமக்கள் நீதிமன்றங்களில் அதிகளவு பணத்தை செலவிட்டு வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!