மின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி

சிலாபம் – ஆனமடுவ, தோனிகல பகுதியில் மின்னல் தாக்கி இளம் பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இதன்போது மற்றொரு பெண்ணும் மின்னல் தாக்கி ஆனமடுவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவத்தில் 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிக மழையுடனான காலநிலையின் போது குறித்த பெண் தேங்காய் உறிப்பதற்காக இரும்பு கம்பியொன்றை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ,அருகிலிருந்த பெண்ணும் மின்னல் தாக்கத்துக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!