நாட்டின் மேலும் இரு பகுதிகள் முடக்கம்!

நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம்மன கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தகுளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சுபத்ரா லங்கா மாவத்தை பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!