நாட்டில், நேற்று மட்டும் ஆயிரத்து 939 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து, 529 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் ஆயிரத்து 939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த தொற்றாளர்கள் அனைவரும், சித்திரைப் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என, இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில், மேலும் 922 பேர், பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 75 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக் காரணமாக, மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. அனையடுத்து, குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து, 16 ஆயிரத்து 720 தொற்றாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்களில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!