வலயக்கல்விப் பணிப்பாளர் கடமையேற்பு

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்ற சுரேந்திரன் அன்னமலர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் நேற்;று மாலை உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்று கையொப்பமிட்டார். வவுனியா தெற்கு வலயத்தின் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மு.இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், வவுனியா வடக்கு வலயத்தில் பணியாற்றி வந்த எஸ்.அன்னமலர் வவுனியா தெற்கு வலயத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். வவுனியா தெற்கு வலயத்தில் பணியாற்றும் அதிபர்கள் மற்றும் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் புதிய தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரை வரவேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!