யாழ்: மணற்காடு சவுக்குக் காட்டில் தீப்பரவல்

யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி மணற்காடு சவுக்கு காட்டில், நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவை அடுத்த, அப்பகுதி இராணுவத்தினர், தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அந்தவகையில், தீ பரவிய இடங்களுக்கு, மணல் இட்டு, தீ பரவாதிருக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த தீ மூலம், சவுக்கு மரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. சவுக்கம் காட்டுக்கு விசமிகள் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!