ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழுத் தலைவராக பிரதமர்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார். ஜோர்ஜியாவின் டிபிலிஸில் நடைபெறவிருந்த இந்த பொதுக் கூட்டம் தற்போது நிலவும் தொற்று நிலைமை காரணமாக இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.

ஒஸ்ரியா மற்றும் மொங்கோலியாவின் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் இக்கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை ஆளுநர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது பொதுக் கூட்டம் எதிர்வரும் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!