கிளிநொச்சி ஊரியானில் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி ஊரியான் கிராம சேவகர் பிரிவில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவுவியந்திர சாரதி, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் நீண்டகாலமாக, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்றுவருவதாக அப்பிரதேச மக்கள் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் பொலிஸாருக்கும் பல்வேறு தடவைகள் முறைப்பாடு வழங்கியிருந்தபோதிலும் அங்கு தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுவந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம், ஊரியான் கனகராயன் ஆற்;றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் மற்றும் ஊரியான் கிராம சேவகர் நந்தகுமார் ஆகியோருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.

இதன்போது ஒரு உழவு இயந்திர சாரதி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டதை அவதானித்து, அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு விசேட அதிரப்படையினருக்கும் குறித்த சாரதி தொடர்பில் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த சாரதியை கைது செய்ததுடன், உழவியந்திரத்தையும் கைப்பற்றினர்.

குறித்த பகுதியில், மணல் கடத்தலுக்கு தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த 50 கியூப் மண்ணையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப்படையினரிடம் பாரப்படுத்தினர்.

இதேவேளை, இந்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டுவரும் ஏனைய வாகனங்களின் பதிவு இலக்கங்களையும் பிரதேச செயலக அதிகாரிகள் பெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!