ஜெனிவா தீர்மான நடைமுறைகள் குறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் தீவிர ஆலோசனை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரிட்டனும், அமெரிக்காவும், தீவிரமாக கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தீர்மானம் தொடர்பாக கூட்டாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இரு நாடுகளும் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக சிலர் மீது பயணத் தடை விதிக்கப்படக் கூடும் என்றும் இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அமெரிக்கா முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் மீது ஏற்கனவே பயணத் தடைகளை விதித்திருக்கின்றது.

மேலும் சிலருக்கு பயணத் தடைகள் விதிக்கப்படலாம் எனவும், அது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புக்களின் உயர் அதிகாரிகளும் இந்த தீர்மானத்தினை நடைமுறைச் சாத்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தன.

எவ்வாறாயினும், இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், அரசாங்கத்தினை தொடர்புபடுத்தாது, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூகத்தின் ஊடாக முன்னெடுப்பதே திட்டமாக உள்ளது.

அதேவேளையில், முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் மற்றும் இராஜதந்திரப் பதவிகளை வழங்குவது குறித்தும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கடும் அதிருப்தியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!