அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தெரிவித்தார்.
அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை உண்ணவரும் யானைகள் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன.
இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலலித்த பிரதேச சபை தவிசாளர், யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். (நி)