எதிர்க்கட்சித் தலைவர் – ரஷ்யத் தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரி ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ரஸ்யா உதவவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு நடமாடும் மருத்துவமனைகள் பிசிஆர் இயந்திரங்கள் தீவிரகிசிச்சை பிரிவு கட்டில்கள் போன்றவற்றை வழங்குமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்றாவது கொரோனா வைரஸ் அலை காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியான காலத்தில் உள்ளது என தெரிவித்த எதிர்கட்சி தலைவர் தீவிரசிகிச்சை பிரிவின் கட்டில்கள் பிசிஆர் இயந்திரங்கள் போன்றவற்றிற்கான அவசரதேவை காணப்படுகி;ன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை உதவவேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன் எனவும் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் முக்கிய எதிர்கட்சி கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!