பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்டது இலங்கை

இலங்கை வீரர்களின் சுழல் பந்து வீச்சு மூலம் பங்களாதேஷ் அணியை 209 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி கொண்டது.

2019 ஓகஸ்டில் தொடங்கிய உலக டெஸ்ட் சம்பியன் ஷிப் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும்.

இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

நான்காம் நாள் ஆட்டம் முடிவுடையும்போது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 5 விக்கெட்கள் இழப்பக்கு 177 ஓட்டங்கள் என்ற நிலையில் தடுமாறியது.

தொடர்ந்து 05 ஆம் நாளில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பங்களாதேஷ் அணி 227 ஓட்டங்களையே பெற்றது.

இதனால், 209 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இலங்கையின் பந்துவீச்சில் பிரவீன் ஜெயவிக்கிரம 5 விக்கெட்களையும், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

முன்னதாக இலங்கை அணி முதல் இனிங்ஸில் 493 ஓட்டங்களைப்பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் அணி முதல் இனிங்ஸில் 251 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது
இரண்டாவது இனிங்ஸில் ஆடிய இலங்கை அணி 194 ஓட்டங்களைப் பெற்றது.

இதனால் பங்களாதேஸ் அணி வெற்றி பெற 437 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இரண்டாவது இனிங்ஸில் 227 ஓட்டங்களுக்கும் சகல விக்கெட்களையும் இழந்தது.
இதனால் அலரங்கை 209 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இரு இனிங்ஸ்களிலுமாக அறிமுக வீரர் பிரவீன் ஜெயவிக்கிரம 11 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்ததுடன் போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

தொடர் நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.

இதேவேளை நீண்ட இடைவெளிக்கு பின் வெற்றிபெற்ற இலங்கை அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!