கொடிகாமம் சந்தை மூலம் கொத்தணி அபாயம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி – கொடிகாமம் சந்தை வியாபாரிகள் சிலருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர்களுடன் மேலும் பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதனால் ‘கொடிகாமம் சந்தை கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

கொடிகாமம் சந்தைப் பகுதியில் வர்த்தகர்கள் நால்வருக்கும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்குமாக நேற்று ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது இதையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் சந்தை வியாபாரிகளிடையே கடந்த மாதம் 28ஆம் திகதி எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வியாபாரிகள் இருவருக்கும், அப்பகுதி வர்த்தகர்கள் இருவருக்குமாக நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களுக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, நேற்றைய தினம் 154 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் கிடைக்கும்வரை கொடிகாமம் சந்தை, அதனை அண்டிய வர்த்தக நிலையங்களை முடக்கி வைக்க சுகாதாரப் பிரிவு முடிவு செய்துள்ளது.

அத்துடன், கொடிகாமம் சந்தை மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்களுடன் தொடர்பு கொண்டவர்களை பிரதேசத்திற்கான சுகாதார பரிசோதகர்களுடன் அல்லது 021 227 0014 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும். அவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!