சுவாமி விபுலானந்தரின் 129 ஆவது ஜனன தினம்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129 ஆவது ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள சுவாமி விபுலானந்தர் நீரூற்று பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையினரால் அனுட்டிக்கப்பட்டது.

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தரின் ஜனனதினம் இன்று நாடு பூராக கொண்டாப்படுகின்றது.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை பிரதிநிதிகள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பக்தி கீதமும் இசைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!