கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த பணி காரணமாக மின் தடை

அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக
இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணவத்தை, நிந்தவூர் தியேட்டர் வீதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவில், திராய்க்கேணி, அம்பாறை பிரதான வீதி, ஹிஜ்ரா சந்தி, தைக்கா பள்ளி, கல்முனை பிரதான வீதி, வீரமுனை, பழைய சந்தைப் பகுதி, சொறிக்கல்முனை, வீரைச்சோலை மற்றும் நகர்ப்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் வியாழக்கிழமை சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்கலாவடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடைப்படும்.

இதேவேளை, எதிர்வரும் 11 ஆம் திகதி நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட திராய்க்கேணி பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 18 ஆம் திகதி சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஜே புளக் கிழக்கு மற்றும் மேற்கு, கல்லரைச்சல், காட்டுப்பள்ளி, கைகாட்டிப்பகுதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.

இதேவேளை, எதிர்வரும் 19 ஆம் திகதி நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணவத்தை, நிந்தவூர் முஸ்தபா புரம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படுமெனவும் இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!