மட்டக்களப்பில் பி.சி.ஆர் பரிசோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கூழாவடி திஸ்ஸவீரசிங்க சதுக்கம் கிராம சேவையாளர் மேற்கு பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மூன்று குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் முடக்கப்பட்டுள்ள கூழாவடி திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் மேற்கு பிரிவில் உள்ள மக்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கூழாவடி திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் மேற்குப் பகுதியில் வீதித்தடைகள் போடப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியேறாதவாறு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கூழாவடி திஸ்ஸவீரசிங்க சதுக்க கிராம சேவையாளர் மேற்கு பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர மாவட்ட கொவிட் செயலணி உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலை அடுத்து கூழாவடி திஸ்ஸவீரசிங்க சதுக்க மேற்கு பகுதி முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!