முல்லைத்தீவு வயல் காணியில் கைக்குண்டு மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள, இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில், கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. வயல் காணிக்குள், கைக்குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர், முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், முள்ளியவளை பொலிஸார், கைக்குண்டை சென்று பார்வையிட்டதுடன், நீதிமன்ற அனுமதியைப் பெற்று, ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!