மட்டக்களப்பில் சமூக ஆர்வலர் வழங்கிய காணியில் மக்கள் குடியேற்றம்!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியை சமூக ஆர்வலரான குருசுமுத்து லவக்குமார் என்பவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத நிலையில் வாழும் குடும்பங்களுக்கு சித்திரை புது வருட தினமன்று வழங்கி வைத்தார். இதன்போது உறுதி ஆவணங்களை பெற்றுக் கொண்ட 224 பேர் தங்களுக்கு சொந்தமான காணியில் குடிசை வீடுகளை அமைத்து குடியிருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி மட்டக்களப்பு கிரான் பகுதியில் தமிழர் கலாச்சாரத்தினை பன்பற்றி மக்கள் தங்கள் வீடுகளுக்கு மாவிலை தோரணம் கட்டி பால் காச்சி பொங்கல் இட்டு தாங்கள் வாழ நினைக்கும் வீடுகளுக்குள் குடிபோதல் நிகழ்வினை நடத்தினர்.
மக்கள் தாங்கள் குடியிருக்கும் குறித்த கிராமத்திற்கு பெயர் சூட்டும் முகமாக காணி நண்கொடை செய்தவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது பெயரிலே ‘லவன் எழுச்சி கிராமம்’; என பெயர் நாமமும் சூட்டினார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வறுமமை நிலையில் வாழும், வாடகை வீட்டில் உள்ளோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் என அடையாளம் காணப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்வு கருதி இக் காணி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பொது தேவைகளான மத ஆலயம், பாடசாலை, போன்றவற்றிக்கும் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரத்தினை நிவர்த்தி செய்ய சிறுதோட்டப் பயிர் செய்கை நடவடிக்கைக்காக குத்தகை அடிப்படையில் மேலும் 15 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!