வவுனியாவில், உணவகம் தனிமைப்படுத்தல்!

வவுனியா கொறவப்பொத்தானை வீதி, பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள உணவம், சுகாதார பிரிவினரால், இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம், பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுப்பதற்கும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருமாறு, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பணிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த உணவகத்தில் பணிபுரியும் சிலர், சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில், இன்று, சுகாதார பரிசோதகர்களால், குறித்த உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது. இதன் போது, தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுக்கச் சென்ற சுகாதார பரிசோதகர்களுடன், உணவக ஊழியர்கள் சிலர் முரன்பட்டிருந்தனர்.
அதனையடுத்து, சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, வவுனியா பொலிசாரால், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!