தெற்கின் ஒரு அதிவேக நெடுஞ்சாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி இன்று காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக
வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த வெளியேறும் பகுதியில் பணியாற்றிவரும் ஊழியர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பேருந்து மற்றும் நோய்காவு வண்டிகளக்காக கொட்டாவ வெளியேறல் பகுதி திறக்கப்படும் அதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ வெளியேறல் பகுதிகள் ஊடாக பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை கொட்டாவ நுழைவாயில் வழியாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்க முடியும் எனினும், பற்றுச்சீட்டு வழங்கப்படமாட்டாது எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!