கிளிநொச்சி. கிராஞ்சியில் அத்துமீறும் கடற்படை!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட, கிராஞ்சி கடலில், தொடர்ச்சியாக மீன்பிடிக்கு செல்ல, கடற்படை அதிகாரி ஒருவர் தடை விதித்துள்ளதாக, மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பூர்வீகமாக கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி ஒருவரினால், தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இதனால், இந்த விடயம் தொடர்பில், கடற்தொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!